Our Feeds


Thursday, September 5, 2024

Sri Lanka

ரணில் விக்ரமசிங்க தற்போதும் பழமையான முறையிலேயே உள்ளார் - அநுர!


தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களின் வேதனத்தை 24 சதவீதத்தால் உயர்த்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போலியான வாக்குறுதியை வழங்கியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வேதனத்தை அதிகரிக்குமாறு கோரி அரச பணியாளர்கள் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேதனத்தை அதிகரிக்க முடியாதெனவும், அவ்வாறு வேதனம் அதிகரிக்கப்பட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது ஜனவரி மாதம் முதல் 24 சதவீதத்தால் வேதனம் அதிகரிக்கப்படுமென ஜனாதிபதி கூறுகிறார்.

தமது தோல்வியை அறிந்துள்ள அவர், இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குகிறார்.

சகல விவசாயக் கடனையும் ரத்து செய்வதாகவும் ஜனாதிபதி கூறுகிறார்.

ரணில் விக்ரமசிங்க தற்போதும் பழமையான முறையிலேயே உள்ளார்.

தேர்தல்கள் வருகின்ற போது வேதனம் அதிகரிக்கப்படுமெனக் கூறுகிறார்.

தேர்தல்கள் வருகின்ற போது நெல் மற்றும் தேயிலை விலையை அதிகரிப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று எந்த தேர்தல் வந்தாலும், மதுபானமும் உணவு பொதியையும் வழங்குகின்றார்.

தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் ஆதரவாளர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.

எனினும் கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசகர்கள் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்குவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »