மத்துகம நகரில் முதல் முறையாக தமிழ்ப் பாடசாலை ஒன்றை அமைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (05) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதி அளித்திருக்கிறார். மக்களை சரியாக வழிநடத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
நாட்டில் கேஸ், மின்சாரம், மருந்து இல்லாத வேளையில் அனுரவும் இருக்கவில்லை, சஜித்தும் இருக்கவில்லை. நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே மக்களை மீட்க வந்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கான ரூ.1700 சம்பளம் கட்டாயமாகப் பெற்றுத்தரப்படும்” என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்தார்.