கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் மீண்டும் கட்சியில் இணையுமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சியை மறுசீரமைப்பதாகவும் திறமையான இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.