Our Feeds


Wednesday, September 11, 2024

SHAHNI RAMEES

கண்டி மக்களின் வீடமைப்புப் பிரச்சினையைத் தீர்க்க “கம் உதாவ யுகம்” மீண்டும் ஆரம்பிக்கப்படும் - சஜித்

 

கண்டி மாவட்டத்தில் வீடற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற தோட்ட சமூகத்தினரின் வீடமைப்புப் பிரச்சினையைத் தீர்க்க, வீடுகளை நிர்மாணிப்பதற்கான   “கம் உதாவ யுகம்” மீண்டும்  ஆரம்பிக்கப்படும்  என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டியில் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்திலும் வறுமை அதிகரித்துள்ளதாக  சுட்டிக்காட்டிய இவர்  கோத்தபாயவின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முட்டாள்தனமான முடிவுகளே  அந்த வறுமைத்தனத்திற்கான  காரணம்  எனவும் அம்மக்கள்  என்றைக்கும் மானியத்தை எதிர்பார்ப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்  கண்டி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திரு.சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரசின் தலையீட்டின் மூலம் அவர்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கான ஜனசவிய, சமுர்த்திய, அஸ்வசும மற்றும் கமிலிய வேலைத்திட்டங்களின் நற்பண்புகளை ஒன்றிணைக்கும் புதிய வேலைத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு வருடங்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா நிவாரணம் வழங்கப்படும். 

மக்களின் நுகர்வு, சேமிப்பு, முதலீடு, உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய ஐந்து வழி தொழில் முறை மூலம் 24 மாதங்களுக்கு ஏழை மக்களுக்கு மாதந்தோறும் 20000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களைப் பலப்படுத்தி, 24 மாத இறுதியில், அந்தச் சமூகத்தை வறுமையிலிருந்து விடுவிப்போம்.

கண்டி நகரில் உள்ள அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் முறையான நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நட்புறவு பாடசாலைகளாக மாற்றப்படும். பெண்களுக்கு புதிய தொழில்நுட்பக் கல்வி அளிக்கப்படுகிறது.

கண்டியில் 13 தொகுதிகள் உள்ளன. ஆரம்ப கட்டமாக, 13  தொகுதிகளுக்கும்  உற்பத்தி தொழிற்சாலைகள் வழங்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக 13 தொகுதிகளுக்கும்  உட்பட்ட இருபது பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவப்படும். கண்டி மாவட்ட இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரு மில்லியன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலாளர் எல்லையிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டின்  சில பெரும் பணக்காரர்களைத் தவிர, 220 இலட்ச சாதாரண மக்கள் தாங்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் எனவும்  எதிர்வரும் 21ஆம் திகதி எமக்குக் கிடைக்கும் உறுதியான பொது வெற்றியின் மூலம் இந்நாட்டின் 220 இலட்சம் மக்கள் நிச்சயமாக அவர்களின் துயரத்திலிருந்து விடுபடுவார்கள் 

நாட்டை அழிக்கும்  ரணில் - அனுர ஆகிய அண்ணன்  தம்பி   இரு சகோதரர்களும்  ஏதாவது செய்து சஜித்தை தோற்கடிக்க  சதி செய்கின்றனர்.

முதல் சுற்றில் ரணில் அனுர கூட்டினை  தோற்கடித்து இரண்டாம் விருப்பு வாக்குகளின்றி, வெற்றி பெறுவேன் மேலும் இம்முறை டொலர்களின்  மானங்கெட்ட பேரங்களுக்கு நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். தற்போது நாட்டில் உள்ள அனைவரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இம்முறை அரசியல் வியாபாரிகளின் மானங்கெட்ட பேரங்களுக்கு இந்த நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நாட்டில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு கடவுச்சீட்டு கொடுக்க முடியாது. மறுபுறம், வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வர விரும்புபவர்களுக்கு விசா கொடுக்க முடியாது. இதை செய்பவரால் நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா? கடவுச்சீட்டு , விசா என்பனவற்றிற்கு வரிசையில் மக்கள் அவதிப்படுகின்றனர். எனது தந்தையின் ஆடைத்தொழிற்சாலை திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையில் பிறந்த ஐக்கிய ஆடை சங்கம், கொள்வனவு செய்ய  எமது நாட்டுக்கு வருவதற்கு இந்த அரசாங்கத்தினால் விசா வழங்க முடியாது என்று கூறுகிறது. இயந்திர விநியோகத்தர்கள்  , தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் நாட்டுக்கு வர விசா வழங்க முடியாமல்  இருக்கின்றது . இது நமது ஆடைத் தொழிலை கடுமையாகப் பாதிக்கிறது என்று ஆடைத் தொழிலில் உள்ள பலமானவர்கள் கூறுகின்றனர்.

இந்த விசா நெருக்கடியால் நம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். . வேறு நாடுகளுக்குச் செல்வதாகச் சொல்கிறார்கள். அனுரவுடனான மோசடி ஒப்பந்தத்திற்குப் பதிலாக இந்தக் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன். இந்த நாட்டின் எதிர்காலத்தை கடவுச்சீட்டில் ஒப்படைக்க முடியாதவர்களிடம் ஒப்படைக்க முடியுமா?

ரணில் அநுரவின் மாபெரும் சதியை முறியடிக்க இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன், விசா மற்றும் கடவுச்சீட்டு வரிசைகளில் வழிவகுத்த பெரும் திருட்டுகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் .


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »