Our Feeds


Monday, September 30, 2024

Admin

நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டி - டக்ளஸ் தேவானாந்தா!



நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ். தெல்லிப்பளை - மாவைகலட்டி பகுதி மக்களை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா சந்தித்துக் கலந்துரையாடினார்.

சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு மக்கள் மத்தியில் உரையாற்றிய டக்ளஸ் தேவானாந்தா, தான் மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன் என நம்புவதாகவும், தேர்தலின் பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின் கொள்கையின்படி இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »