பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பில் 3 சுயேச்சைகுழுக்கள் இன்று (30) மட்டு. தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணங்களை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டடுள்ளன.
இதற்கமைய மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் சுயேச்சைகுழுவில் 8 பேர் போட்டியிடுவதற்காக முதல் முதலாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
அதேவேளை, மட்டக்களப்பு நல்லையா வீதியைச் சேர்ந்த அரச திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற 81 வயதுடைய கனகசூரியம் சோமாஸ்கந்தமூர்த்தி தலைமையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கு 8 பேருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அலிசாஹீர் மௌலானாவின் ஊடக செயலாளர் அஸ்மி தலைமையில் சுயேச்சைக்குழுவில் 8 பேர் களமிறக்கப்பட்டு அதற்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர்.
Monday, September 30, 2024
அலிசாஹீர் மௌலானாவின் ஊடக செயலாளர் அஸ்மி உள்ளிட்ட 3 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »