Our Feeds


Tuesday, September 24, 2024

Zameera

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்


 இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் எமது சகோதர ஊடகமான டெய்லி மிரர் பிரத்தியேகமாக அறிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அவர் உட்பட நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

டெய்லி மிரர் பிரத்தியேகமாக பெற்ற பட்டியலின்படி, ஜனாதிபதி திஸாநாயக்க சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதவிகளை வைத்திருப்பார், அதே நேரத்தில் பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக இருப்பார்.

NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் தலா பல அமைச்சுகளுடன் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

கொழும்பு தேர்தல் தொகுதியில் அனுரகுமார திஸாநாயக்கவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நிபுன ஆராச்சி நேற்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பரில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்த பிறகு, எப்போது வேட்புமனுக்கள் கோரப்படும் என்ற திகதியை அவர் நிர்ணயிப்பார் என்றும் NPP முகாம் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திகதிக்கு பிறகு, வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 10 முதல் 17 நாட்கள் கால அவகாசம் வழங்கும்.

ஜனாதிபதி திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்த பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றம் எப்போது கூடும் என்ற திகதியையும் அவர் அறிவிப்பார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்றுக் காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, முப்படைத் தளபதிகளையும் அதன் பின்னர் தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்று தனது வயதான தாயாரை தரிசனம் செய்வதற்காக தம்புத்தேகம நோக்கி பயணித்தார்.

இன்று இரவு அவர் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் NPP பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக டெய்லி மிரர் அறிகிறது.

டிசம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் NPP வெற்றி பெற்றால், தனது வாக்காளர்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அதிக ஆதரவைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று டெய்லி மிரர் அறிகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »