கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ரகத்தைச் சோ்ந்த
ஏவுகணை ஒன்றை சீனா நேற்று புதன்கிழமை சோதித்துப் பாா்த்துள்ளது.அமெரிக்கா வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட அந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்ததாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஐ.சி.பி.எம் ரக ஏவுகணைகளை சீனா வெளிப்படையாக சோதித்து அது தொடா்பான அறிக்கையை வெளியிடுவது மிகவும் அரிதான நிகழ்வு. இருந்தாலும், தனது படை வலிமையைப் பறைசாற்றுவதற்காக இந்த சோதனையை சீனா நடத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
சீனா ஏவுகணைப் படையில் டி.எப்-31ஏ.ஜி, டி.எப்-5பி, டி.எப்-41 உள்ளிட்ட ஏராளமான ஐ.சி.பி.எம் ரக ஏவுகணைகள் உள்ளன. அந்த நாட்டின் முதல் ஐ.சி.பி.எம் ஏவுகணையான டி.எப்-5, முதல்முறையாக கடந்த 1980-ஆம் ஆண்டில் 9,000 கி.மீ. தொலைவுக்கு செலுத்தப்பட்டது.