வங்குரோத்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர முன்வைத்துள்ள தேசிய மூலோபாயத் திட்டம் வெற்றிபெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
35% வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என சர்வஜன அதிகாரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"35% வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிப்போம் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே, வங்குரோத்தான நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமானால், எங்கள் வேட்பாளர் முன்வைக்கும் தேசிய மூலோபாயத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்" என்றார்.