Our Feeds


Friday, September 6, 2024

SHAHNI RAMEES

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது உலகின் மிகப்பெரிய கப்பலான 'EVER ARM'..!

 

மிகப்பெரிய கப்பலான EVER ARM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வியாழக்கிழமை (05) வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

EVER ARM, 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம், கணிசமான கோடை வரைவு 17.027 மீட்டர் மற்றும் அதன் செயல்பாட்டு திறன் மற்றும் சரக்கு திறனை மேம்படுத்தும் மேம்பட்ட உந்துவிசை அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது

400 மீற்றர் நீளம் கொண்ட EVER ARM சுமார் 24,000 TEU ( 20அடி கொள்கலன் ) சுமக்கக் கூடிய இக் கப்பலை ஆசியாவின் ஒரு சில துறைமுகங்களால் மட்டுமே கையாளமுடியும். அந்த வரிசையில் கொழும்பு துறைமுகமும் ஒன்றாகும்.

ஆழ்கடல் முனையமாக கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்பட்டு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதனால் இவ் சாதனையை இலங்கை வசப்படுத்த முடிந்துள்ளது.

இதன் பயனாக சீனா-ஐரோப்பா-மத்திய தரைக்கடல் சார்ந்த வர்த்தக பாதையில் இலங்கையின் முக்கியத்துவம் நிரூபிக்கப்படுவதால் புதிய சந்தைவாய்ப்பு, முதலீடுகள், தொழில்வாய்ப்பு போன்றன இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »