பமுனுகம பிரதேசத்தில் இளைஞர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்க நகையை திருடிய சந்தேகத்தின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களை பொலிஸ் அதிகாரிகள் கொடூரமான முறையில் தாக்கியதாக குற்றம் சுமத்தி நேற்று பிற்பகல் போபிட்டிய பமுனுகம பொலிஸாருக்கு முன்பாக கிராம மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.