பதிவுசெய்யப்படாத சொகுசு காரொன்று
குறித்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கில் மேலும் இருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளனர்.இதனையடுத்து சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்று நட்சத்திர தர ஹோட்டல் வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.