பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரச பெருந்தோட்ட நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் பண்டிகை முற்பணம் ரூ. 10000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த முற்பணம் பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
இதற்கு முந்தைய வருடங்களில் 10000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணம் தற்போது 20000 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்களின் கொள்வனவுக்கான வாய்ப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முற்பணம் அதிகரிப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல், வனஜீவராசிகள், வனவள, பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதி அமைச்சிள் செயலாளர் பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.