இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல் நடத்திவருவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.
அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் இருந்து அறிக்கை அளித்த பாலஸ்தீனிய பத்திரிகையாளர் முகமது கைரி, வானத்தில் டசன் கணக்கான ஏவுகனைகள் மேற்கு நோக்கி ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலை நோக்கிச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் ஈரான் இஸ்லாமிய இராணுவம் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
Tuesday, October 1, 2024
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »