எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் பெப்ரல் அமைப்பு (PAFFREL) கேட்டுக்கொள்கிறது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை கையளிக்கும் வேளையில், ஆர்ப்பாட்டங்கள் இன்றி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கோரப்படுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது சட்டத்திற்கு முரணான மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.