களுத்துறை பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 10 பேர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
களுத்துறை பிரதேசத்தில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை புளத்சிங்கள பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.