Our Feeds


Saturday, November 30, 2024

Zameera

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று


 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன்(30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் இன்றும் திறக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையும் வருமான வரி செலுத்துவதற்காக திறந்து வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »