முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு மஹிந்தானந்த அளுத்கமகே வெளியில் வந்தபோது, ஊடகவியலாளர்கள் அவ்விடத்திலேயே தங்கியிருந்ததுடன், அவர்கள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
அப்போது, ‘‘நான் இப்போது சுதந்திரமானவன்… மீடியாக்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை…’’ என்றார்.