Our Feeds


Thursday, November 21, 2024

Admin

JUST_IN: CID யில் ஆஜரானார் பிரசன்ன ரணதுங்க!



முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.


தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.


மேலும், முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இன்று (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »