மேல் மாகாணத்திலுள்ள சில பகுதிகளில் 18 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொரொன்துடுவ உள்ளிட்ட பகுதிகளுக்கே இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, இன்று காலை 9 மணி முதல் நாளை அதிகாலை 3 மணிவரை நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
பிரதான நீர் விநியோக மார்க்கத்தில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Thursday, December 26, 2024
18 மணித்தியால நீர் விநியோகத் தடை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
