Our Feeds


Thursday, December 12, 2024

Sri Lanka

400 பில்லியன் டொலர் சொத்துக்களை சேகரித்த முதல் நபர் எலான் மஸ்க்!


உலகில் 400 பில்லியன் டொலர் சொத்துக்களை சேகரித்த முதல் நபர் என்ற சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் படைத்துள்ளார்.

ப்ளும்பெர்க் பில்லியனர்ஸ் இன்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எலான் மஸ்க்கின் சொத்து விகிதம் அதிகரிக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. அதன் மதிப்பு சுமார் 350 பில்லியன் அமெரிக்க டொலராகும். உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் திகழ்ந்து வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் விற்பனை மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்வு ஆகியவற்றால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், எக்ஸ் ஏ.ஐ., எனும் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் வாகனங்கள், தூய்மையான எரிசக்தி ஆகியவற்றின் மீது முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையால் இதுவரையில் இல்லாத அளவுக்கு டெஸ்லாவின் பங்கு 415 டொலராக அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜானதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அவரது ஆதரவாளரான எலான் மஸ்க் நிறுவனத்தின் பங்குகள் தாறுமாறாக அதிகரித்துள்ளது. டிசம்பர் 10ஆம் திகதி நிலவரப்படி, அமேசான் தலைவர் ஜெப் பெஜோஸை விட, எலான் மஸ்க் 140 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்கள் அதிகம் சேமித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »