Our Feeds


Monday, December 23, 2024

Zameera

சட்டவிரோத மின்சார வேலிகள் : 50 யானைகள் உயிரிழப்பு


 

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


இலங்கை மின்சார சபை மேலும் கூறியுள்ளதாவது,


இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


நாட்டில் உள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்களின் ஆதரவு அவசியமாகும்.


எனவே, சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள மின்சார வேலிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் இலங்கை மின்சார சபையின் 0112 118 767 அல்லது 1987 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். 


நாட்டில் உள்ள காட்டு யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்கின்றது. எனவே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு உதவுகின்ற காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »