யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் 21 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் 11 பேர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 9 நோயாளர்களும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு 4 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக விவசாயிகளுக்கும், கடல்நீர், ஏரி மீன்பிடித்தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அதேநேரம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கால்நடைகளுக்குக் குறித்த தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய குருதி மாதிரிகளை ஆய்வு செய்வதற்குக் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Tuesday, December 17, 2024
எலிக் காய்ச்சலினால் 85 பேர் பாதிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »