Our Feeds


Wednesday, December 25, 2024

Sri Lanka

சிறுவர்களை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தத் தடை!

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வர்த்தமானி அறிவித்தல் குற்றவியல் சட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் வெளியிடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக விளம்பரங்களில் சிறுவர்களை அவசியமற்ற வகையில் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் பல தடவைகள் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட போதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனப் பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »