Our Feeds


Tuesday, December 24, 2024

Zameera

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க விசேட நடவடிக்கை - நலிந்த ஜயதிஸ்ஸ


 மீண்டும் தலைதூக்கும் பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் தலையீட்டு வருவதாக தெரிவித்தார்.

“பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.. ஆனால் ஷோ நடாத்தி வாராந்திர நடவடிக்கைகள் இரண்டு வார நடவடிக்கைகளில் செய்ய எதிர்பார்க்கவில்லை.

இதில் பாதுகாப்பு படையினர் படிப்படியாக தலையிட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மட்டும்தான் சொல்ல முடியும். அதன் முடிவுகளை பார்க்க முடியும். தொடர்ந்து நடவடிக்கைகளை எடுப்போம் என மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »