Our Feeds


Tuesday, December 24, 2024

Zameera

வீதி புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை! - கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்


 காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமாரிடம் இன்று (23) கோரிக்கை விடுத்தார்.


இது தொடர்பான கூட்டம் காத்தான்குடி நகர சபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார், திட்டத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம். திலகரத்ன, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏனைய அதிகாரிகள், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எஸ்.எம். அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


முதல் கட்டமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


(எஸ். சினீஸ் கான்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »