ரயில் பயணச்சீட்டுக்குப் பதிலாக முற்பணம் செலுத்திய ரயில் அனுமதி அட்டையை வரும் ஏப்ரலுக்கு முன்னர், புதிய அட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அட்டைகளைப் பயன்படுத்தும் மக்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் பெறும் வகையில் நவீன தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியுமெனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், சம்பந்தப்பட்ட ரயில்வே ப்ரீபெய்ட் அட்டையை சரிபார்க்க அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Wednesday, December 25, 2024
புதிய ரயில் பருவகால அட்டை அறிமுகம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »