Our Feeds


Monday, December 16, 2024

Sri Lanka

எனது பெயருக்கு முன்பாக கலாநிதி பட்டம் போட்டவரை கண்டுபிடியுங்கள் - நீதியமைச்சர்!




நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (16) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று, தனது பெயருக்கு முன்பாக 'கலாநிதி' என்ற பட்டத்தை பயன்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது பெயருக்கு முன் பயன்படுத்தாத கலாநிதி பட்டத்தைப் பயன்படுத்தியதால் தான் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், தேவையற்ற இந்த அறிமுகத்தை செய்த நபரை கண்டுபிடித்து தருமாறும் அவர் தனது முறைப்பாட்டில்  தெரிவித்துள்ளார்.

தனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்ற பெயரைப் பயன்படுத்தியதற்காக நாடாளுமன்றத் தொடர்புத்துறை மன்னிப்புக் கேட்டதாகவும், தவறான அறிமுகம் ஊடகங்களால் திருத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக சுமார் மூன்று நாட்களாக பல அவதூறு பரப்புரைகளுக்கு ஆளானதாகவும், எனவே, இந்த தவறான அறிமுகத்தை ஏற்படுத்தி தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியவரை கண்டு பிடிக்கவே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »