முஸ்லிம் சமூக பிரச்சினைகளில் தலையிட மாட்டேன் என நான் கூறவில்லை - எனது கருத்தை திரிவுபடுத்தியுள்ளார்கள் - பிரதியமைச்சர் மௌலவி முனீர் விளக்கம்
ஹஜ் கடமைகளுக்கான செயல்பாட்டாளர்களையோ, வக்பு சபைக்கான பொறுப்பாளர்களையோ நான் நியமிப்பதில்லையெனவும், அது எனது அமைச்சின் கீழ் வராது எனவும் நான் கூறிய செய்தியை திரிவுபடுத்தி ஒரு பத்திரிக்கை செய்தியாக்கியுள்ளது. அதனையே மற்ற ஊடகங்களும் முஸ்லிம் சமூக பிரச்சினைகளில் நான் தலையிட மாட்டேன் என கூறியதாக தலைப்பிட்டு செய்தியாக்கியுள்ளன. நான் அப்படி எங்கும் கூறவில்லை என பிரதியமைச்சர் மௌலவி முனீர் முளப்பர் சற்று முன் ShortNews செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.