இந்திய கிரேண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது.
நேற்று முன்தினம் 14ஆவது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
இதனால் குகேஷ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவங்களின் உரிமையாளரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் குகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "18ஆவது @ 18!" என்று பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Sunday, December 15, 2024
குகேஷ்க்கு எலான் மஸ்க் வாழ்த்து!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »