சீனாவும், இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும். அதன்படி இலங்கையுடன் மிகநெருங்கிய உயர்மட்டத்தொடர்பைப் பேணுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரது பதவியேற்பின் பின்னர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முதலாவதாக இந்தியாவுக்கான அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அதனையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் அவர் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், நேற்று முன்தினம் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'சீனாவும், இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும். இருநாடுகளுக்கும் இடையில் மிகநெருக்கமான உயர்மட்டத் தொடர்புண்டு. அத்தகைய உயர்மட்டத் தொடர்புகளைப் பேணுவதற்கும், இருநாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியத்தொடர்புகளை முன்கொண்டுசெல்வதற்கும், இருநாடுகளுக்கும் இடையிலான பல்துறைசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் சீனா தயாராக இருக்கிறது' எனவும் பேச்சாளர் மாவோ நிங் மேலும் குறிப்பிட்டார்.
Wednesday, December 25, 2024
இலங்கையுடன் மிகநெருங்கிய தொடர்பைப் பேணத்தயார் - சீன வெளிவிவகாரப் பேச்சாளர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »