Our Feeds


Sunday, December 1, 2024

SHAHNI RAMEES

வாகன இறக்குமதி பற்றிய விசேட அறிவிப்பு!

 



எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன

இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் அங்கு உரையாற்றிய இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே;


“பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும். ஏனெனில் இந்த அரசாங்கம் எமக்கு ஒரு கொள்கையாக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக உள்ளோம். மேலும் நல்ல வாகனத்தையும் தரமுடியும். நியாயமான விலையில் வாகனங்களின் இறக்குமதியை மீளப்பெறுவதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை நியமித்துள்ளது வாகன இறக்குமதிக்கு சர்வதேச நாணய நிதியமும் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இலங்கையில் சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் 04 வருடங்களாக அநாதரவாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது..”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »