முஸ்லிம் சார்ந்த பிரச்சினைகள் வரும் போது தான் முன்னிற்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தான் உடன்படுவதில்லை என்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.
தனியார் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“முஸ்லிம்கள் சம்பந்தமான விவகாரங்களுக்கு நான் பொறுப்புதாரி அல்ல. அதற்கு பொறுப்பாக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் சார்ந்த பிரச்சினைகள் வரும் போது தான் முன்னிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றவர்கள், சமூகத்தின் நிலைப்பாட்டினை சிலர் புரிந்து கொள்வதில்லை. இவைகள் தொடர்பில் கட்சி என்னிடம் ஆலோசனைகளை கேட்டால் அதற்கு ஆலோசனையை நான் வழங்குவேன்..
வக்ப் சபையாக, ஹஜ் குழுக்களாக இருக்கலாம் இவர்கள் மக்களுடன் கலந்துரையாடாமல் நியமித்த வரலாறு தான் இருக்கின்றது. நமது அரசு அவ்வாறு இல்லை.
வக்பு சபைக்கு அழுத்தம் கொடுக்க என்னால் முடியாது. மேலும், எனது அமைச்சு அல்லாத எதிலும் நான் தலையிட மாட்டேன்..”