Our Feeds


Monday, December 2, 2024

SHAHNI RAMEES

மத்ரஸா மாணவர்களின் உயிரிழப்பு; அதிபர், ஆசிரியர் பிணையில் விடுதலை

 

 காரைதீவு - மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரபுக் கல்லூரி மாணவர்கள் 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் குறித்த மாணவர்களையும் இன்னும் சிலரையும் ஏற்றிகொண்டு சம்மாந்துறைக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.



இச்சம்பவம் தொடர்பில் அறபுக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர் மற்றும் 02 உதவியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரும் டிசம்பர் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.



இவ்வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (02) சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கே. கருணாகரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர் தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

(சாய்ந்தமருது செய்தியாளர்)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »