இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, குவைத் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது
'தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' (The Order of Mubarak Al Kabeer)என்ற இந்த விருதை குவைத்தின் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ் (Sheikh Meshal Al-Ahmad Al-Jaber Al Sabah) இன்று பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தார்
கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் தெரிவு செய்யப்பட்ட உலகத் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது
குவைத் நாட்டின் மன்னரின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்
இந்த விஜயத்தை பயனுடையதாக்கும் வகையில் பல்வேறு உயர் மட்ட பேச்சுவாரத்தைகளில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன