ஆசிய கிரிக்கெட் பேரவையின் ஏற்பாட்டில் மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிருக்கான இளையோர் (19 வயதுக்குட்பட்ட) ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணியின் தலைவியாக மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மனுதி நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவியாக மாத்தறை அனுர கல்லூரியைச் சேர்ந்த ரஷ்மிகா செவ்வந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் உள்ளூர் தொடர்களில் பிரகாசித்துவந்த பல வீராங்கனைகளும் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
மகளிர் இளையோர் ஆசியக்கிண்ணத்தின் இலங்கை அணி முதல் போட்டியில் டிசம்பர் 15ஆம் திகதி மலேசியாவையும், இரண்டாவது போட்டியில் 16ஆம் திகதி பங்களாதேஷையும் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் குழாம்
மனுதி நாணயக்கார (தலைவி), ரஷ்மிகா செவ்வந்தி, விமோசிகா பாலசூரிய, ஹிருனி ஹன்சிகா, சுமுது நிசன்சலா, தஹமி சனுத்மா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சஷினி கிம்ஹானி, அஷேனி தலகுனே, பிரெமுதி மெத்சரா, சமோதி பிரபோதா, சஞ்சனா காவிந்தி, தனுலி தென்னகோன், லிமன்சா திலகரட்ன, செஹேரா இந்துவரி