காட்டு யானையின் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் உளுக்குளம் பகுதியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வது மைல் கல் பகுதி ,மஹபுளங்குளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடயவர். உயிரிழந்தவருடைய சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.