ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
மனோ கணேசன், நிஸாம் காரியப்பர்,சுஜீவ சேனசிங்க ,முது மொஹமட் ஆகியோர் நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றனர்.
இதனையடுத்து, புதிய சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் பிரதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும்.
தற்போது வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளின் படி, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலாநிதி ஜகத் விக்ரரத்னவின் பெயர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், எதிர்கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஹினி கவிரத்னவின் பெயரை பரிந்துரைக்க எதிர்கட்சி தயாராகி வருகின்றது.
Monday, December 16, 2024
SJB தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »