Our Feeds


Tuesday, December 24, 2024

Zameera

ரோமானிய தூதுவர் Steluta Arhire பிரதமரை சந்திப்பு

 

இலங்கையின் ரோமானிய தூதுவர், Steluta Arhire தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (23) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

குறித்த கலந்துரையாடலில், இலங்கை மற்றும் ரோமானியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பிரதமர் தூதுவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் தூதுவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசு அர்ப்பணிப்புடன்  உள்ளது என பிரதமர் இங்கு உறுதிப்படுத்தினார்.

இந் நிகழ்வில் பிரதம செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக பிரதம செயலாளர் சாகரிக்கா போகஹவத்த, வெளியுறவு அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இயக்குனர் ஜெனரல் ஷோபிணி குணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »