கண்டியில் இருந்து எல்லக்கு உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் செல்வதற்காக இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்யப்பட்ட 5500 ரூபா பெறுமதியான இரண்டு மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டுகளை 27000 ரூபாவுக்கு வெளிநாட்டுப் பெண்கள் இருவருக்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை புகையிரத நிலையத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு யுவதிகள் உரிய பயணச்சீட்டுகளை விற்று பணத்தை எடுத்துச் சென்ற வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 27ம் திகதி இது தொடர்பான பயணச்சீட்டுகள் இணையத்தில் வெளியாகி 40 வினாடிகளுக்குள் கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசத்தில் உள்ள இரண்டு பெண்களின் அடையாள அட்டை இலக்கங்களுக்கு குறித்த பயணச் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவும் இந்த பயணச்சீட்டு கடத்தலில் கண்டி புகையிரத நிலைய அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
