Our Feeds


Monday, January 27, 2025

Zameera

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் யோஷித!


 பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ இன்று (27) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, பண மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டார்.

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச நேற்று கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சுமார் 4 மணித்தியாலங்கள் விளக்கமறியலின் பின்னர் கொழும்பு, அளுத்கடே மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, யோஷித ராஜபக்ஷவை கைது செய்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது பொது பாதுகாப்பு அமைச்சருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »