Our Feeds


Friday, January 31, 2025

Zameera

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகளை அதிகரிக்கின்றன


 சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.


அதன்படி, 2024ஆம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இலங்கை சமூக மருத்துவ சங்க தலைவர் சிறப்பு மருத்துவர் கபில ஜெயரத்ன தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

2022ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 133 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு 270 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவை அனைத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. குறித்த விடயம் தொடர்பான தகவல்களை ஓரிரு வாரங்களில் வெளியிடுவோம் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன. நாங்கள் இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »