Our Feeds


Monday, February 17, 2025

SHAHNI RAMEES

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு - செலவுத் திட்டம் #Live_Update

  


2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி

அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்தி வருகிறார்.


எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சி…

எமக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச தரப்பினருடன் வலுவான தொடர்புகளை பேணி முதலீட்டாளர்களுடன் நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் நாம் வெற்றிப் பெற்றுள்ளோம்.


கடனை மீள செலுத்துவதற்கு 2028 ஆம் ஆண்டு வரை காலவகாசம் உள்ளது.இதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் கடன் செலுத்தும் தரப்படுத்தலை அதிரிக்க வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரித்தது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது...


"2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்."

நெருக்கடியைக் குறைப்பதற்கான சில நடவடிக்கைகள், குறிப்பாக செலவின் அடிப்படையில் எரிசக்தி விலைகளை சரிசெய்தல், வரிகளும் வட்டி வீதங்களும் அதிகரிப்பது குடிமக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பங்கை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைக்க பொருளாதார இறையாண்மை அவசியம் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ​​பொதுக் கடனை மறுசீரமைப்பதில் ஈடுபட்டிருந்தோம், அதை மாற்றுவது நாட்டை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும் என்பதால் அதை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை...."

சம்பிரதாய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து வௌியேறி முன்னுரிமை இனங்காணப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்த வரவு செலவு திட்டம் இதுவாகும்.

தேசிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான வரவு செலவு திட்டமே இது. கைத்தொழிற்துறை , சேவை, விவசாயம் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். அதற்காக பொது மக்களின் உதவிகள் அவசியம். அத்தியாவசிய பொருட்கள் சேவையை சாதாரண விலைக்கும் தரமாகவும் தொடர்ந்து வழங்க முறைமையொன்று.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வரலாற்றில் முதன்முறையாக அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

"வரையறுக்கப்பட்ட வரி நிதிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க முறைமை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது."

"பொருளாதாரத்தில் அதிக ஜனநாயகமயமாக்கல் தேவை."

"பொருளாதாரத்தின் அனைத்து நன்மைகளும் பொருளாதார செயல்முறைக்கு பங்களிக்கப்படுகின்றன."

"உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வரவு செலவு திட்டம்."

"நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதார தொலைநோக்குப் பார்வையுடன் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டம்.z

"ஊழல் மற்றும் விரயத்தை குறைத்து, கூட்டு ஒழுக்கத்தின் மூலம் ஒரு புதிய பயணத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் முறைமை ஒன்றை நாங்கள் உருவாக்கி வருகிறோம்."


"மக்களின் பொருளாதார உரிமைகளை உறுதி செய்வதே இந்த வரவு செலவு திட்டத்தின் தத்துவம்"

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்கிறேன்…


*தற்போது உள்ள சுங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சுங்க சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”


* வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வணிக ஒத்துழைப்புக்குப் பயன்படுத்தவுள்ளோம்.”

* முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை வழங்குதல்

* பசுமை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த நடவடிக்கை.

* பொருளாதார சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை.

*அரசுக்குச் சொந்தமான நிலங்கள் உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு விடப்படும்.

* நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான வசதியை மேம்படுத்துவோம்.

* வங்குரோத்து நிலை குறித்த சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்..

* பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்களுடன் 'அனைத்து சேவைகளும் ஒரே இடத்திலிருந்து' என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.


* பொது-தனியார் கூட்டாண்மை தொடர்பான புதிய சட்டம்.


*நில உரிமைகளை மேம்படுத்தவும், நிலங்களின் வணிகமயமாக்கலை அதிகரிக்கவும் 'பிம் சவிய' வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும்.


 


*இலங்கையின் கனிம வள முதலீடு, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளில் இலங்கையின் பயன்படுத்தப்படாத திறனை நிர்வகிக்க அரசாங்கம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை நாடுகிறது.


*தர ஆய்வு மற்றும் சான்றிதழ் செயல்முறைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி ஆதரவை அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குகிறது.


 


*வெளிநாட்டு வருமானம் மற்றும் ஈவுத்தொகையை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு புதிய முறை.


*சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வக பரிந்துரை மையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை திறம்பட வழங்குவதற்காக, நாட்டில் தேசிய முகாமைத்துவ தரவு அமைப்பின் விரும்பிய முடிவுகளை அடைய 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

*டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த 3,000 ரூபாய் மில்லியன் ஒதுக்கீடு.

*பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன 'Permit' ம் கிடைக்காது…

இந்த வருடம் வாகனமும் கிடைக்காது...


*கர்ப்பிணிப் தாய்மார்களுக்கு போசனையுள்ள உணவு வேளையொன்றை பெற்றுக் கொடுக்க மாதாந்த கொடுப்பனவு ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும் நிலையில், அதற்காக 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

*திரிபோஷ வேலைத்திட்டம் நிறுத்தப்படாது...

*திரிபோஷ வேலைத்திட்டத்திற்காக 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு… 

* யாழ் நூலகத்திற்கு கணினி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை பெற்றுக் கொடுக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..


* தோட்டப் புறங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மனித வளம், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்...

*2025 ஆம் ஆண்டு சுகாதார துறைக்கு 604 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..


*இதில் மருந்து வழங்கல் மற்றும் சுகாதார வழங்கலை உறுதிப்படுத்துவதற்காக 185 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..


*மருத்து தட்டுப்பாடு ஏற்பட எவ்வித வாய்ப்புகளும் இல்லை...

*சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 500 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


*சுற்றுலாத் துறையை மேம்படுத்த டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும்.

*கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஸ்கேனிங் அமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...


கொழும்பு துறைமுக கொள்கலன் நெரிசலை குறைக்க வேயங்கொடையில் உள்நாட்டு கொள்கலன் முற்றம் ஒன்று நிறுவப்படும்...

இதற்காக  500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...

*டிஜிட்டல் பொருளாதார அதிகார சபை ஒன்றை நிறுவ நடவடிக்கை ...

*டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளுக்கான புதிய சட்ட அமைப்பு ஒன்று.

* வருடாந்த தகவல் தொழில்நுட்ப வருமானத்தை 5 பில்லியன் அ.டொலர்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

* முதியோர் கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்பு...

* சிறுநீரக கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்பு…

*பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்..

*அதில் 2,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்... மீதி 3,000 ரூபாய் அவர்களில் சட்டரீதியான பாதுகாவலருக்கு வழங்கப்படும்...

*இதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு....



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »