நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுவதாகவும் அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 18 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையிலிருப்பதால் அதன் கீழ் சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் இல்லையெனவும் பதில் பொலிஸ்மா அதிபர் இந்த விசேட ஊடக சந்திப்பின் போது மேலும் தெரிவித்தார்.
Saturday, February 22, 2025
நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுகின்றன - பதில் பொலிஸ்மா அதிபர்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »