Our Feeds


Sunday, February 2, 2025

Sri Lanka

விசேட தேவையுடைய சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - சபாநாயகர்!


விசேட தேவையுடைய சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றத்தில் குழுவொன்றை உருவாக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட தேவையுடையோரின் அமைப்புக்களினது ஒன்றியத்துடனான சந்திப்பின்போது, சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது, விசேட தேவையுடையவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன்

அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுயாதீன ஆணைக்குழு ஒன்று நிறுவப்படவேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சைகை மொழியைத் தேசிய மொழியாக்கும் சட்டமூலம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விசேட தேவையுடைய அமைப்புகளின் ஒன்றியத்தினது உறுப்பினர்களால் இதன்போது சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »