யாழ் பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர்களால்
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டமானது இன்றைய தினம் (04.02.2025) யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இடம்பெற்று வருகின்றது.
கருப்புக் கொடி
இதன்போது தேசிய கொடி இறக்கப்பட்டு கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம் : இறக்கப்பட்டது தேசிய கொடி
இதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.
நாட்டின் பல பகுதிகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழர் செறிந்து வாழும் வடக்கில் பாரிய போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், யாழ் நல்லூர் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் திரண்டு என எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்துடன் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகள் - பிரதீபன்