முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை 60 ஆக குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19ம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்.
இந்த மனு இன்று (06) நீதிபதிகள் பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.