Our Feeds


Sunday, February 2, 2025

Sri Lanka

ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பிரதானியுமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் (Horst Kohler) தமது 81 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். 

பொருளாதார நிபுணரான ஹோர்ஸ்ட் கோஹ்லர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகப் பதவி வகித்திருந்தார். 

அதன் பின்னர் அரசியலுக்குப் பிரவேசித்து ஜேர்மனியின் ஜனாதிபதியாகத் தெரிவானார். 

2004 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஹோர்ஸ்ட் கோஹ்லர் 2010 ஆம் ஆண்டு வரை குறித்த பதவியை வகித்தார். 

2010 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »