Our Feeds


Saturday, February 15, 2025

Zameera

சட்டமூல வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும் - ரவூப் ஹக்கீம்


 உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும். ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதத்தினாலேயே தீர்ப்பு வெளியாவதற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உள்ளூராட்த் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் அறிவித்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் உள்ளடக்கத்தை பார்க்கும் போது நீதியரசர்கள் குழாமில் இரண்டு பேர் இந்த விடயம் அரசியலமைப்பின் 12/1ஆம் சரத்திற்கு முரணானது என்றும் இதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் அங்கிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 அப்படியாயின் இதனை  சட்டமா அதிபர் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து முறையாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு உறுதியளித்து இந்த சரத்து அரசியலமைப்பு முரணானது என்று கூறியிருந்தால் இந்த வழக்கை ஒரே நாளில் முடித்திருக்க முடியும். இது சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதமாகும். நாங்கள் சுட்டிக்காட்டும் வரையில் அதுபற்றி தெரியாதா? என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »