புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இதனை வெளியிட்டுள்ளார்.
அவர் பயணித்த வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், சந்தேகத்திற்குரிய மற்றைய பெண் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லது தடைகள் எதுவும் இல்லை எனவும், நீண்டகாலமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Thursday, February 20, 2025
புதுக்கடை நீதிமன்ற வளாகத்துப்பாக்கிதாரியின் நிஜப் பெயர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »